ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பு: சிறுவர்களின் பெற்றோர்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறி இருப்பதாவது:-;
ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்கள் பணத்தை இழப்பதை தவிர்க்க பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும். சிறுவர்களும், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டால் 2 சிறுவர்கள் தங்களது தந்தையின் கடையில் இருந்து ரூ.8 லட்சத்தை எடுத்து கொடுத்து ஏமாந்த சம்பவம் சென்னை தேனாம்பேட்டையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.