செல்போன் கோபுரத்தில் வயர் திருடியவர் கைது

செல்போன் கோபுரத்தில் வயர் திருடியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-12-20 08:34 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் கடந்த 16-ந்தேதி ரூ.5 ஆயிரம் மதிப்பிலான 10 மீட்டர் கேபிள் வயர் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் ராஜாமணி என்பவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வயரை திருடியது குன்னம் தாலுகா, வைத்தியநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் அதியமான் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதியமானை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்