மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக மோசடி
மதுரை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
வேலை வாங்கி தருவதாக
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சேலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிபிரகாஷ்(வயது 30). இவரிடம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி, அவருடைய கணவர் கருணாகரன் மற்றும் சிவக்குமார் என்பவர் அறிமுகமாகி உள்ளனர். பின்னர் அவர்கள், மாரிபிரகாஷிற்கு மதுரை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.
இதனை நம்பிய அவர், ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை அவர்கள் 3 பேரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை மட்டுமே கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர்.
3 பேர் மீது வழக்கு
இதுகுறித்து மாரிபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சுப்புலட்சுமி, அவருடைய கணவர் கருணாகரன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.