ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-12-19 20:25 GMT
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே உள்ள நெய்யூர் வாடிவிளையை சேர்ந்தவர் பிரன்சிஸ். இவரது மகன் சுபின்ராஜ் (வயது 36). ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். இவருக்கு மது பழக்கம் உள்ளதாக தெரிகிறது. மேலும், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
இந்தநிலையில், சுபின்ராஜ் நேற்று முன்தினம் இரவு படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ  இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்