நாகர் சிலைகளை சேதப்படுத்தியவர் கைது

நாகர் சிலைகளை சேதப்படுத்தியவர் கைது

Update: 2021-12-19 20:21 GMT
திருவட்டார்:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுடன் தொடர்புடைய தென்கரை கண்டன் சாஸ்தா காவு கோவில் உள்ளது. இங்கு நேற்று காலையில் ஆதிகேசவ பெருமாள் கோவில் மேலாளர் மோகன் குமார் மற்றும் காவு கோவில் நிர்வாகிகள் மனோகரன் தம்பி, ஸ்ரீஹரி உள்பட பலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, மாத்தூர் தாணிவிளையை சேர்ந்த மகேஷ் என்பவர் அங்கு வந்தார். அவர் தகாத வார்த்தைகள் பேசி கோவிலில் இருந்த யானை மற்றும் நாகர் சிலைகளை தூக்கி வீசி அவமதிப்பு செய்தார். 
இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகேசை கைது செய்தனர். மேலும், தூக்கி வீசப்பட்ட நாகர் சிலைகள் மீண்டும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் சிலைகள் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்