சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி; குடும்பத்தினருக்கு கலெக்டர் விஷ்ணு ஆறுதல்

நெல்லையில் சுவர் இடிந்து பலியான 3 மாணவர்களின் குடும்பத்தினரை கலெக்டர் விஷ்ணு சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2021-12-19 20:11 GMT
பேட்டை:
நெல்லையில் கடந்த 17-ந் தேதி பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த துயர சம்பவத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்தினரை நேரடியாக அவரது இல்லத்திற்குச் சென்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆறுதல் கூறியதுடன் அவர்களது குறைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
நெல்லை பேட்டை சத்யா நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் பலியான மாணவர் அன்பழகனின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற அவர், அவரது தாயார் மாரியம்மாள், தந்தை கார்த்திக், சகோதரர் பிரபு மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அங்கிருந்து பழவூருக்கு சென்ற அவர் மாணவர் சுதிஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து சுத்தமல்லி அணைக்கட்டை சென்று பார்வையிட்டு அதன் பராமரிப்பு எவ்வாறு உள்ளது? என ஆய்வு செய்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உதவி கலெக்டர் சந்திரசேகர் வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, நரசிங்கநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் தாளமுத்து மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்