அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை
ஆலங்குளம் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அண்ணாநகரில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூைஜகள் நடைபெற்றது. தொடர்ந்து அய்யப்பன், விநாயகர், முருகன் ஆகிய சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஆலங்குளம் ஊராட்சி தலைவர் காத்தம்மாள், ஆலங்குளம் கூட்டுறவு சங்க தலைவர் பசுபதி ராஜ், சரவணன், பாலமுருகன், நாராயணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சபரி சாஸ்தா அய்யப்பன் பக்தர் குழுவினர் செய்து இருந்தனர்.