241 பள்ளி, சத்துணவு, அங்கன்வாடி கட்டிடங்கள் இடிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பழுதடைந்த 241 பள்ளி கட்டிடம், அங்கன்வாடி சத்துணவு கூடம் மற்றும் கழிப்பறை ஆகியவைகள் இடிக்கும்பணி நடைபெற்று வருகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-12-19 17:04 GMT
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் பழுதடைந்த 241 பள்ளி கட்டிடம், அங்கன்வாடி சத்துணவு கூடம் மற்றும் கழிப்பறை ஆகியவைகள் இடிக்கும்பணி நடைபெற்று வருகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உத்தரவு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி சிவகங்கை மாவட் டத்தில். பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை தலைமையிலான அலுவலர்களை கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. 
இந்த குழு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன் வாடி மைய கட்டிடங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் 99 பள்ளிக் கட்டி டங்கள், 58 அங்கன்வாடி மைய கட்டிடங்கள், 16 கழிப்பறை கட்டிடங்கள் மற்றும் 68 பள்ளி சத்துணவு சமையலறை கட்டிடங்கள் உள்பட 241 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது கண்டறியப்பட்டு உடனடியாக அவைகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
கண்காணிப்பு
மேலும் பாதிப்புகள் கண்டறியப்பட்ட கட்டிடங்களுக்கு அருகாமையில் மாணவ- மாணவிகள் செல்லாத வண்ணம் கண்காணிக்கப்படுவதுடன் அகற்றப்பட்ட கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டும் பணியும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

மேலும் செய்திகள்