பேரளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு;

Update: 2021-12-19 16:24 GMT
நன்னிலம்:-

பேரளம் அருகே உள்ள நெடுங்குளம் கோவில்பத்து தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது27). இவர் காரைக்கால் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெடுங்குளத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ராம்குமார் ஓட்டினார். வேலங்குடி ஆர்ச் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த ராம்குமார் படுகாயங்களுடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்