மயிலம் அருகே 2 கோவில்களில் திருட்டு தொடர் சம்பவங்களால் மக்கள் அச்சம்

மயிலம் அருகே 2 கோவில்களில் திருட்டு சம்பவம் நடந்தது. தொடர் சம்பவங்கள் நடந்து வருவதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2021-12-19 16:18 GMT

மயிலம், டிச.19-


மயிலம் அருகே கோரை கேணி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை, இந்த கோவிலின் இரும்பு கேட் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி முருகன், உள்ளே சென்று பார்த்தார். 

அப்போது பக்தர்கள் காணிக்கை செலுத்தி வந்த உண்டியலை காணவில்லை. காணிக்கை பணத்துடன் உண்டியலை மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. மேலும், அதே கிராமத்தில் சுந்தர ராமய்யா கோவிலில் மர்ம மனிதர்கள் கதவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.

மேலும் ஒரு கோவில்

இதே போல் பொண்ணம்பூண்டு கிராமத்தில் ராசய்ய கோவிலில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 1 கிராம் பொட்டு தங்க காசை மர்ம மனிதர்கள் திருடி சென்றுள்ளனர். 

 இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மயிலம் பகுதியில் கடந்த சில நாட்களாக, கிராமத்து கோவில்களை குறித்து உண்டியல் திருட்டு சம்பவம் அதிகரித்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 எனவே இதில் போலீசார் துரிதமாக செயல்பட்டு, கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்