திருவாதிரை உற்சவ விழா பொன்னூஞ்சலில் அருள்பாலித்த பெரியநாயகி அம்மன்
பழனியில் திருவாதிரை உற்சவ விழாவையொட்டி பொன்னூஞ்சலில் பெரியநாயகி அம்மன் அருள்பாலித்தார்.
பழனி:
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழா பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 11-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாளான நேற்று இரவு பெரியநாயகி அம்மன் சன்னதியில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்னூஞ்சலில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை காண சப்பரத்தில் சிவபெருமான் எழுந்தருளினார். கோவில் ஓதுவார் திருவெம்பாவை பாடல்களை பாடினார். அதையடுத்து அம்மன், சிவபெருமானுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சிவபெருமான், அம்மன் தனித்தனி சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் 10-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்வே ஆருத்ரா தரிசனம் ஆகும். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.