நீடாமங்கலத்தில் இருந்து நெல்லைக்கு அரவைக்காக 1,000 டன் நெல்
அரவைக்காக 1,000 டன் நெல்
நீடாமங்கலம்:-
நீடாமங்கலத்தில் இருந்து நெல்லைக்கு அரவைக்காக 1,000 டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதையொட்டி திருவாரூர் மாவட்டம் பாமணி மத்திய சேமிப்புக்கிடங்கு மற்றும் தெற்கு நத்தம், இடையர்நத்தம், ஆகிய ஊர்களில் உள்ள திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 1,000 டன் நெல் 79 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத்தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் நெல்லை புறப்பட்டு சென்றது.