பாரதியார் கவிதை போட்டியில் தொப்பம்பட்டி அரசு பள்ளி மாணவர் சாதனை
பாரதியார் கவிதை போட்டியில் தொப்பம்பட்டி அரசு பள்ளி மாணவர் சாதனை;
பொள்ளாச்சி
மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு, பொள்ளாச்சி கம்பன் கலைமன்றம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இடையே கவிதை மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், தொப்பம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 6,7,8 -ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு பாரதியாரை நினைவு கூறும் வகையில் கவிதை மற்றும் கட்டுரைகள் எழுதி அனுப்பினர்.
இதில், 8-ம் வகுப்பு படிக்கும் சு.தனுஷ் என்ற மாணவர் எழுதிய கவிதை முதல் இடம் பிடித்தது. இதையடுத்து மாணவருக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டன. பரிசு பெற்ற மாணவர்களை பொள்ளாச்சி வடக்கு வட்டாரக்கல்வி அலுவலர் சின்னப்பராஜ், பள்ளித் தலைமை ஆசிரியர் சு.கணேசன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மனோரஞ்சிதம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் காளிமுத்து, பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.