ரேக்ளா போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்
ரேக்ளா போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்
கிணத்துக்கடவு
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் நெம்பர் 10 முத்தூரில் தி.மு.க சார்பில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. இந்த போட்டி இரு பிரிவுகளாக நடந்தது. திண்டுக்கல், கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, திருப்பூர், உடுமலை, தாராபுரம், கேரளா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட காளை மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு காளைகள் சீறிப் பாய்ந்து சென்று இலக்கை நோக்கி ஓடியது.
ரேக்ளா போட்டியில் காளைகள் சீறிபாய்ந்து சென்றதை கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். போட்டியில் முதல் இடத்தை பிடித்த காளை மாடு ஜோடிக்கு 1 பவுன் தங்க காசும், 2-வது இடத்தை பிடித்த மாடு ஜோடிக்கு ¾ பவுன் தங்க காசும், 3-ம் பரிசாக ½ பவுன் தங்ககாசும் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.