காஞ்சீபுரம் நகரில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றம்

காஞ்சீபுரம் நகரில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் நாளை முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது.

Update: 2021-12-19 14:18 GMT
நெரிசலை தவிர்க்க...

காஞ்சீபுரம் நகர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டி செயல்படுத்தவேண்டிய மாதிரி திட்ட போக்குவரத்து மாற்றங்கள் நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனைத்துவித கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை காஞ்சீபுரம் நகரத்திற்குள் வர அனுமதியில்லை.

செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து வாலாஜாபாத் மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள் சரக்கு வாகனங்கள் பெரியார் நகர் - மிலிட்டரி ரோடு - ஓரிக்கை ஜங்ஷன் வழியாக உத்திரமேரூர் செல்ல வேண்டும்.

செங்கல்பட்டு, வாலாஜாபாத் மார்க்கமாக

செங்கல்பட்டு, வாலாஜாபாத் மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், சரக்கு வாகனங்கள் பெரியார் நகர் - மிலிட்டரி ரோடு - செவிலிமேடு ஜங்ஷன் வழியாக வந்தவாசி செல்ல வேண்டும்.

செங்கல்பட்டு, வாலாஜாபாத் மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், சரக்கு வாகனங்கள், பெரியார் நகர்-மிலிட்டரி ரோடு - செவிலிமேடு ஜங்ஷன் - அவுட்டர் பைபாஸ் - கீழம்பி ஜங்ஷன் வழியாக வேலூர் செல்ல வேண்டும்.

செங்கல்பட்டு, தாம்பரம், வாலாஜாபாத் மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், சரக்கு வானங்கள், பெரியார் நகர் - மிலிட்டரி ரோடு - செவிலிமேடு ஜங்ஷன் - அவுட்டர் பைபாஸ் - கீழம்பி ஜங்ஷன் - வெள்ளை கேட் - அரக்கோணம் செல்ல வேண்டும்.

சென்னை, சுங்குவார்சத்திரம் மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், சரக்கு வாகனங்கள் கீழம்பி ஜங்ஷன் - அவுட்டர் பைபாஸ் - செவிலிமேடு மேம்பாலம் ஜங்ஷன் - வந்தவாசி செல்ல வேண்டும்.

சென்னை, சுங்குவார்சத்திரம் மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், சரக்கு வாகனங்கள் கீழம்பி ஜங்ஷன் - அவுட்டர் பைபாஸ் - செவிலிமேடு மேம்பாலம் ஜங்ஷன் - ஓரிக்கை ஜங்ஷன் வழியாக உத்திரமேரூர் செல்ல வேண்டும்.

சென்னை, சுங்குவார்சத்திரம் மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், சரக்கு வாகனங்கள் கீழம்பி ஜங்ஷன் - அவுட்டர் பைபாஸ் - செவிலிமேடு மேம்பாலம் ஜங்ஷன் - ஓரிக்கை ஜங்ஷன் - மிலிட்டரி ரோடு - பெரியார் நகர் ஜங்ஷன் வழியாக வாலாஜாபாத், செங்கல்பட்டு செல்ல வேண்டும்.

உத்திரமேரூர், மாகரல் மார்க்கமாக

உத்திரமேரூர், மாகரல் மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், சரக்கு வாகனங்கள் ஓரிக்கை ஜங்ஷன் - மிலிட்டரி ரோடு - பெரியார் நகர் ஜங்ஷன் வழியாக வாலாஜாபாத், செங்கல்பட்டு அல்லது தாம்பரம் செல்ல வேண்டும்.

உத்திரமேரூர் மற்றும் மாகரல் மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், சரக்கு வாகனங்கள் ஓரிக்கை ஜங்ஷன் - செவிலிமேடு ஜங்ஷன் - அவுட்டர் பைபாஸ் - கீழம்பி ஜங்ஷன் வழியாக வேலூர் அல்லது அரக்கோணம் அல்லது ஸ்ரீபெரும்புதூர் செல்ல வேண்டும்.

வந்தவாசி மற்றும் மாங்காலிலிருந்து வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், சரக்கு வாகனங்கள் செவிலிமேடு மேம்பாலம் ஜங்ஷன் - ஓரிக்கை ஜங்ஷன் - மிலிட்டரி ரோடு - பெரியார் நகர் ஜங்ஷன் வழியாக வாலாஜாபாத், செங்கல்பட்டு அல்லது தாம்பரம் செல்ல வேண்டும்.

வந்தவாசி மற்றும் மாங்காலிலிருந்து வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், சரக்கு வாகனங்கள் செவிலிமேடு ஜங்ஷன் - அவுட்டர் பைபாஸ் - கீழம்பி ஜங்ஷன் வழியாக வேலூர் அல்லது அரக்கோணம் அல்லது ஸ்ரீபெரும்புதூர் செல்ல வேண்டும்.

வேலூர் அல்லது அரக்கோணத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், சரக்கு வாகனங்கள் கீழம்பி ஜங்ஷன் - அவுட்டர் பைபாஸ் - செவிலிமேடு மேம்பாலம் ஜங்ஷன் - வழியாக மாங்கால், வந்தவாசி செல்ல வேண்டும்.

வேலூர் மற்றும் அரக்கோணத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள், சரக்கு வாகனங்கள் கீழம்பி ஜங்ஷன் - அவுட்டர் பைபாஸ் - செவிலிமேடு மேம்பாலம் ஜங்ஷன் - ஓரிக்கை ஜங்ஷன் வழியாக உத்திரமேரூர் செல்ல வேண்டும்.

காஞ்சீபுரம் நகரத்தில்

வேலூர் மற்றும் அரக்கோணத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள் சரக்கு வாகனங்கள் கீழம்பி ஜங்ஷன் - அவுட்டர் பைபாஸ் - செவிலிமேடு மேம்பாலம் ஜங்ஷன் - ஓரிக்கை ஜங்ஷன் - மிலிட்டரி ரோடு - பெரியார் நகர் ஜங்ஷன் வழியாக வாலாஜாபாத், செங்கல்பட்டு செல்ல வேண்டும்.

காஞ்சீபுரம் நகரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் அல்லது சுங்குவார்சத்திரம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை வந்தவாசி, செய்யாறு, உத்திரமேரூர் செல்லும் பஸ்கள் வாகனங்கள் பொன்னேரிக்கரை, கீழம்பி ஜங்ஷன், செவிலிமேடு ஜங்ஷன், ஓரிக்கை ஜங்ஷன் போன்ற இடங்களில் மட்டுமே ஏற்றி, இறக்கிவிட வேண்டும்.

காஞ்சீபுரம் நகரத்தில் இருந்து ஒரகடம் அல்லது வாலாஜாபாத் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை வந்தவாசி, செய்யாறு, உத்திரமேரூர், வேலூர், அரக்கோணம் செல்லும் பஸ்கள் வாகனங்கள் பெரியார் நகர் ஜங்ஷன், ஓரிக்கை ஜங்ஷன், செவிலிமேடு ஜங்ஷன் கீழம்பி ஜங்ஷன் போன்ற இடங்களில் மட்டுமே ஏற்றி இறக்கிவிட வேண்டும்.

காஞ்சீபுரம் நகரத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், மாங்கால் அல்லது செய்யாறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை செவிலிமேடு ஜங்ஷன், ஓரிக்கை ஜங்ஷன், பெரியார் நகர் ஜங்ஷன், கீழம்பி ஜங்ஷன், பொன்னேரிக்கரை ஜங்ஷன் போன்ற இடங்களில் மட்டுமே ஏற்றி, இறக்கி விட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்