கற்பக விநாயகா தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சின்ன கொள்ளம்பக்கத்தில் உள்ள கற்பக விநாயகா தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
விழாவுக்கு கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் காசிநாதபாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 457 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் சுப்புராஜ் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் சிறப்பான இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஒவ்வொரு துறையிலும் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு விருது கேடயங்களை வழங்கினார்.
இதில் கல்லூரி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி, கல்லூரியின் டீன் சுப்பாராஜ் மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.