தூத்துக்குடி அருகே நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடி அருகே நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன;
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகர்ப்புற கோட்டம் முத்தையாபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சார வினியோகம் செய்யப்படும் உயரழுத்த மின் பாதைகளில் மேம்பாட்டு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 12 மணி வரை கனநீர் ஆலை, டாக் குடியிருப்புகள், அபிராமி நகர், சூசை நகர், ஜே. எஸ். நகர், கிருஷ்ணா நகர், பொன்னாண்டி நகர், காலாங்கரை, பாரதி நகர், வீர நாயக்கன் தட்டு, குடிநீர் வடிகால் வாரியம் நீரேற்றும் நிலையம்
மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜவகர் முத்து தெரிவித்து உள்ளார்.