கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி சரிந்து விழுந்தது
திருவண்ணாமலையில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி சரிந்து விழுந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி சரிந்து விழுந்தது.
திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.
கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த மண்ணை பொக்லைன் எந்திரம் உதவியோடு இன்று லாரியில் ஏற்றி அகற்றும் பணி நடந்தது.
அப்போது அந்த லாரி பள்ளத்தின் அருகில் நிறுத்தப்பட்டு இருந்ததால் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீரென ஒரு பக்கமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
அதில் லாரியிலேயே அமர்ந்திருந்த டிரைவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் இதனால் கோட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் சேதம் அடைந்தது. இதையடுத்து 3 பொக்லைன் எந்திரங்களின் உதவியோடு பள்ளத்தில் சாய்ந்து விழுந்த லாரியை மீட்டனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.