அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாக உள்ளது. வரலாற்று சிறப்புவாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் இன்று திங்கட்கிழமை ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. அதிகாலை 3 மணி முதல் நடராஜபெருமான் சிவகாசி அம்மாள் சாமிக்கு மஞ்சள், சந்தனம் குங்கும், பால்,கரும்புச்சாறு, உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தாக்குதல் இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் தொற்றும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலக மக்கள் கொரோனா, ஒமைக்ரான் ஆகிய நோய் தாக்குதல் இல்லாமல் நலமுடன் வாழ இன்று திங்கட்கிழமை அவினாசி கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் சந்திரசேகர் அம்பாள் சாமிக்கு அணிவிக்க 2016 கடல் சோழியால் மாலை தயார் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூ வியாபாரி பாபு கூறுகையில் நடராஜர் சாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் 2016 கடல் சோழிகள் மற்றும் தர்ப்பை புல், ருத்ராட்சம் உள்ளிட்டவைகளால் மாலை, கிரீடம், குஞ்சிதபாதம். ஜடை அலங்காரம் தயாரித்துள்ளோம் என்றார்.