கோபியில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் குடில்

கோபியில் உள்ள இம்மானுவேல் கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-12-18 21:46 GMT
கடத்தூர்
கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனால் கோபி பகுதியில் உள்ள தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்டார்கள் தொங்க விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள இம்மானுவேல் கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. தேவாலயத்துக்கு வருபவர்கள் கிறிஸ்துமஸ் குடிலை பார்த்து ெசல்கிறார்கள். 

மேலும் செய்திகள்