ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. முதியவர் பலியானாா்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 240 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 406 பேருக்கு பரிசோதனை செய்ததில் 48 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 46 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 957 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 78 வயது முதியவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 707 ஆக உயர்ந்தது. தற்போது தொற்று உள்ள 576 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.