சத்துணவு அமைப்பாளர் தற்கொலை
கல்லிடைக்குறிச்சியில் சத்துணவு அமைப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
அம்பை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொன்மாநகர் காலனியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 35). இவரது மனைவி ஆனந்தேஜாதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீரவநல்லூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆனந்த ஜோதி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ஆனந்த ஜோதி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உடனடியாக கல்லிடைக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்த ஜோதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.