கொரோனா தடுப்பூசி முகாம்
ஆலங்குளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம்,
ஆலங்குளம், உப்புபட்டி, எதிர்கோட்டை, மம்சாபுரம் ஆகிய கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தட்டி காளை தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் மதியரசு மற்றும் செவிலியர் அடங்கிய சுகாதார குழுவினர் 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.