பணியின் போது இறந்த போலீசாரின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி

தஞ்சையில் பணியின் போது இறந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை திருச்சி மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2021-12-18 20:01 GMT
தஞ்சாவூர்:
தஞ்சையில் பணியின் போது இறந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை திருச்சி மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வழங்கினார்.
ஐ.ஜி. பாலகிருஷ்ணன்
திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று தஞ்சை வந்தார். தஞ்சை நகர உட்கோட்டத்தை ஆய்வு செய்யும் பொருட்டு ஆயுதப்படை மைதானத்தில் நடந்த கவாத்து பணிகளை பார்வையிட்டார். பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த போலீசாரின் உடைகள், துப்பாக்கி, தொப்பி உள்ளிட்ட உடைமைகளை பார்வையிட்டார்.
அப்போது போலீசாருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு, அலுவலகத்துக்கு சென்று பதிவேடு பராமரிப்புகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் பணியில் இருக்கும் போது இறந்த போலீசாரின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

மேலும் செய்திகள்