மாணவர்கள் படிக்கட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும்
பஸ் பயணத்தின் போது மாணவர்கள் படிக்கட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் என ேபாலீஸ் சூப்பிரண்டு கூறினார்.;
சிவகாசி,
சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள மேட்டமலை ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், போட்டையூர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெண்கள் மற்றும் குழந்தைகள் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டக்குழுவும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் கண்ணன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சாலை விதிகளை கண்டிப்பாக அனைவரும் கடை பிடிக்க வேண்டும். கல்லூரிக்கு வரும் மாணவர்கள் படிக் கட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும். படிக்கட்டு பயணம் ஆபத்தானது.
இவ்வாறு அவர் கூறினார். இதில் சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராஜ், சாத்தூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிமாறன், ஆலோசகர் கோபாலகிருஷ்ணமூர்த்தி, தமிழ்த்துறை தலைவர் மாலதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ஆங்கிலத்துறை பேராசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார். கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் கல்லூரியின் முன்பு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.