குமரி எல்லையில் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

குமரி எல்லையில் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது

Update: 2021-12-18 19:17 GMT
களியக்காவிளை, 
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள் திடீரென செத்து மடிந்தன. அவற்றை கேரள கால்நடைத்துறை சோதனை செய்த போது பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இந்த நிலையில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி நேற்று தமிழக- கேரள எல்லை பகுதியான படந்தாலுமூடு பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வாகனங்களில் கிருமி நாசினி தௌிக்கும் பணி நடந்தது. அப்ேபாது, கால்நடைத்துறை ஊழியர்கள் கேரளாவில் இருந்து வந்த வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதித்தனர். 

மேலும் செய்திகள்