தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-18 18:39 GMT
அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கால்நடைகள் இறந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த கால்நடைத்துறையினர்  செங்குணம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தினர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர் .
குமார் அய்யாவு, செங்குணம், பெரம்பலூர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவு அருகில் இருந்த ஒரு பெரிய மாமரம் பட்டுப்போய் காய்ந்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டுப்போன மாமரத்தை அகற்றினர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

பஸ் நிலையத்தின் மேற்கூரையில் வளரும் அரசமரம் 
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் திருச்சி பஸ்கள் நிற்கும் பகுதியின் மேற்கூரையின் மேல் பகுதியில் அரச மரக்கன்று ஒன்று முளைத்துள்ளது.  இவை நாளடைவில் மரமாக வளர்ந்து கட்டிடத்தின் உறுதித்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. எனவே  இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து பஸ் நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெரம்பலூர். 

ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி 
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், சுக்கம்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் ஆவதினால் தற்போது பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஈ.சுக்கம்பட்டி, கரூர். 

கழிவறையால் நோய் பரவும் அபாயம் 
திருச்சி மாவட்டம், லால்குடி மேலதைக்கால் கீழே கிருஷ்ணாபுரம் தெருவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பிடத்தின் இயற்கை உபாதைகள் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இயற்கை உபாதைகள் கட்டிடத்தின் அருகே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், லால்குடி, திருச்சி. 

பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? 
புதுக்கோட்டையில் இருந்து கந்தர்வகோட்டை, கிளாங்காடு, வடசேரிபட்டி, இடையபட்டி, வேலாடிபட்டி, கரம்பக்குடி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் புறநகர் பஸ்கள் முள்ளூர் பஸ் நிறுத்தத்தில் நின்று சென்றது. தற்போது இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று செல்வது இல்லை. இதனால் முள்ளூர் கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுரேஷ், முள்ளூர், புதுக்கோட்டை. 

மூடப்பட்ட அஞ்சலகம் செயல்பாட்டிற்கு வருமா? 
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ஸ்ரீனிவாசநகர் 2வது தெருவில் செயல்பட்டு வந்த அஞ்சலகம் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து அஞ்சலக துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பூட்டப்பட்டுள்ள அஞ்சலகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலசுப்பிரமணியன், திருவானைக்காவல், திருச்சி. 

குண்டும், குழியுமான சாலைகள் 
திருச்சி தென்னூா், பாலக்கரை, ஸ்ரீரங்கம், உத்தமர்கோவில், குடமுருட்டி பாலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மராமத்து செய்யப்பட்டது. மராமத்து பணிகள் முறையாக நடைபெறாததால் தற்போது மீண்டும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலைகளில் வாகனங்கள் செல்வதினால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராஜசேகரன், ஆண்டாநல்லூர், திருச்சி. 

எலும்புக்கூடான மின்கம்பம் 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, முத்தரசநல்லூர் முத்தமிழ்புரம் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முத்தரசநல்லூர், திருச்சி. 

மேலும் செய்திகள்