கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் சாவு

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-12-18 18:13 GMT
கரூர்
கரூர்
அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூர் லிங்கத் துறையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 35). கொத்தனார். இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராஜ்குமார் கரூர் 80 அடி சாலையில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் கொத்தனார் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் மேல்பகுதியில் இருந்து நிலைதடுமாறி ராஜ்குமார் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். 
இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்