வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள்

சீர்காழி நகர் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-12-18 17:00 GMT
சீர்காழி:
சீர்காழி நகர் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தென்பாதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஈசானிய தெரு, அரசு மருத்துவமனை சாலை, தேர் தெற்கு வீதி, தேர் மேல வீதி, கொள்ளிடம் முக்கூட்டு, ெரயில்வே ரோடு, சிதம்பரம் சாலை, சீர்காழி புறவழிச்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. 
இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் கால்நடைகள் படுத்து கிடப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் செல்லும் போது கால்நடைகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிறார்கள்.
எனவே  சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கால்நடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

மேலும் செய்திகள்