சேந்தமங்கலத்தில் காதலிக்க வற்புறுத்தி நர்சை தாக்கிய வாலிபர் கைது
சேந்தமங்கலத்தில் காதலிக்க வற்புறுத்தி நர்சை தாக்கிய வாலிபர் கைது
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி நர்சாக ஒரு இளம்பெண் பணியாற்றி வருகிறார். இவரை சேந்தமங்கலம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (வயது 28) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வந்த மணிகண்டன் அந்த பயிற்சி நர்சிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பயிற்சி நர்சை சரமாரியாக தாக்கினார். இதில் பயிற்சி நர்சின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மணிகண்டனை மடக்கி பிடித்து சேந்தமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலிக்க வற்புறுத்தி பயிற்சி நர்சை தாக்கிய மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.