தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-18 16:48 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயன்பாட்டுக்கு வராத தரைப்பாலம்
கம்பம் 14-வது வார்டு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்த பிறகும் தரைப்பாலம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், கம்பம்.
சேதமடைந்த நிலையில் மின்வாரிய கட்டிடம்
வேடசந்தூர் மின்வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்கட்டண வசூல் மைய கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரியும் வகையில் இருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜ், வேடசந்தூர்.
பழுதடைந்த தெருவிளக்கு
போடி தாலுகா சிலமலை ஊராட்சி புதுக்காலனியில் தெருவிளக்கு பழுதடைந்து உள்ளது. மேலும் தெருவிளக்கை மின்கம்பத்துடன் இணைக்கும் கம்பியும் சேதமடைந்துள்ளது. இதனால் தெருவிளக்கு தொங்கிய நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகேந்திரன், சிலமலை.
அரசு மருத்துவமனையின் அவல நிலை
தின்டுக்கல் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அமைந்துள்ள இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவியல், குவியலாக உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் மருத்துவமனை வளாகமே நோய்களை பரப்பும் இடமாக மாறி வருகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
இடிந்து விழும் அபாயத்தில் பள்ளி கட்டிடம்
சின்னாளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. இந்த கட்டிடங்களின் அருகில் தான் மாணவர்கள் விளையாடுவதற்காக வருகின்றனர். அந்த நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கட்டிடத்தை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்செல்வன், வக்கம்பட்டி.

மேலும் செய்திகள்