‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2021-12-18 16:46 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அபாய நிலையில் மின்கம்பம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், இளையாளூர் ஊராட்சி, வடகரை மில்லத்தூர் -செருதியூர் இணைப்பு சாலையில் உள்ள மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்ம்) மின் கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின் கம்பங்கள் வலுவிழந்து எந்தநேரமும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பொதுமக்கள், இளையாளூர்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரியிலிருந்து காலை நேரத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பஸ் வசதியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரே ஒரு பஸ் மட்டும் மயிலாடுதுறையிலிருந்து இயக்கப்படுவதால் அதில் மாணவ-மாணவிகள் படிக்கட்டில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், திருமணஞ்சேரி.

மேலும் செய்திகள்