திருவாரூர் தியாகராஜர் கோவிலில் திருவாதிரை பாத தரிசன நிகழ்ச்சி

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் திருவாதிரை பாத தரிசனம்

Update: 2021-12-18 16:37 GMT
திருவாரூர்:-

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் திருவாதிரை பாத தரிசனம் 20-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. 

திருவாதிரை திருவிழா

திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற சிவன் தலங்களுள் ஒன்றான இக்கோவில் சர்வதோஷ பரிகார தலமாகும். சைவ சமயங்களின் தலைமை பீடமாகவும் விளங்குகிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட தியாகராஜர் கோவிலில் மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 
அதன்படி இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு தியாகராஜர் தனது சன்னதியில் இருந்து புறப்பட்டு ராஜநாராயண மண்படத்தில் எழுந்தருளினார்.

பாததரிசனம்

விழாவில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் 20-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தியாகராஜர், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 
இதனை தொடர்ந்து பாத தரிசனம் காண பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்