அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு தர்மபுரியில் நடைபெற்றது

தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நேற்று நடைபெற்றது.

Update: 2021-12-18 16:32 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நேற்று நடைபெற்றது.
மாநாடு
அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி ஜீவா தலைமை தாங்கினார். தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் மாதேஸ்வரன், அன்புமணி, ராஜேந்திரன், முருகானந்தம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராசன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி, தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சண்முகராஜ், தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் மோகன், அர்ச்சுனன், முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பு
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும். 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை வாபஸ் பெற வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்.
அத்தியவாசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். முன்கள பணியாளர்களுக்கு பாதுகாப்பும், காப்பீடு வசதிகளும் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்