50 சாராய பாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது
மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 50 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பொறையாறு:
ேமாட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 50 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாராயம் கடத்திய 2 பேர் கைது
செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் மஞ்சளாற்று பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், மயிலாடுதுறை அருகே பொன்னூர் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30), ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த யூஜின்ஜான் மகன் தேவபிரசாந்த் (24) என்பதும், இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 50 சாராய பாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், தேவபிரசாந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.