சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், பழனியில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-18 16:02 GMT
திண்டுக்கல்:
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் சூசைமேரி, துணை தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அரபுமுகமது, ஒன்றிய செயலாளர் சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிறுபான்மை மக்களுக்கு விதிகளை தளர்த்தி தொழில்கடன் வழங்க வேண்டும். சிறைகளில் நீதிக்கு புறம்பாக அடைக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரை விடுதலை செய்ய வேண்டும். திரிபுரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதேபோல் பழனி வேல் ரவுண்டானா பகுதியில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் பழனி பகுதி ஒருங்கிணைப்பாளர் ஆரிஸ்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்