விபத்துகளில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க இன்னுயிர் காப்போம் திட்டம் முண்டியம்பாக்கத்தில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

விபத்துகளில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க இன்னுயிர் காப்போம் திட்டத்தை முண்டியம்பாக்கத்தில் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-18 15:52 GMT

விக்கிரவாண்டி, 

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்னுயிர் காப்போம் திட்டம் என்கிற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.  சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு 48 மணி நேரம் தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை அளித்திடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்த திட்டத்தை சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதேபோல் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள  அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் மோகன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

தொடக்க விழா

மேலும்,  இத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சை அளிக்க ஒவ்வொரு மருத்துவமனைக்கும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உள்ள சிகிச்சை அளிக்க இருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு உரிய கடவுச்சொற்களை கலெக்டர் மோகன் வழங்கினார். 

இதேபோல் முண்டியம்பாக்கம் அரசு மருத்வதுகல்லூரி மருத்துவமனைக்கான கடவுச்சொல், கல்லூரி முதல்வர்  குந்தவி தேவியிடம் கலெக்டர் வழங்கினார்.
விழாவில் ரவிக்குமார்            எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழுதுணை தலைவர் ஷீலா தேவி சேரன், விக்கிரவாண்டி ஒன்றிய குழுதலைவர் சங்கீதா அரசி ரவிதுரை, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால், நிலையமருத்துவ அலுவலர் சாந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, நிர்வாக அதிகாரிகள் சிங்காரம் ஆனந்த ஜோதி மற்றும் நிர்வாகிகள் நந்திவாடி பார்த்த சாரதி, வேல்முருகன், முரளி மற்றும் மருத்துவர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்