திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு

திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்பட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-12-18 14:49 GMT
திருவாரூர்:-

திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்பட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும். வெள்ளத்தால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக எக்டேருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அ.தி.மு.க.வின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். இந்த தடையை மீறி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

600 பேர் மீது வழக்கு

இதைத்தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, நோய் தொற்று ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட 600 பேர் மீது திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்