கம்பத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பெண் தற்கொலை
கம்பத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளித்து தற்கொலை கொண்டார்.
கம்பம்:
கம்பம் ராமையா கவுடர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி ஜெனோவா (வயது 55). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நலம் பாதிப்பு இருந்தது. இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் உறவினர்களிடம் அடிக்கடி தான் வாழ்வதை விட சாவதே மேல் என கூறி வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெனோவா உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது பலத்த தீக்காயங்களுடன் அவர் உடல் கருகி பிணமாக கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஜெனோவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கம்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.