காஞ்சீபுரம், செங்கல்பட்டில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-18 07:50 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை குறைக்க வலியுறுத்தல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் அளித்தல், அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க கோருதல், அம்மா மினி கிளினிக்குகள் மூடுவதை நிறுத்த வலியுறுத்துவது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, மாநில எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., கே.பழனி, மாங்காடு நகர கழக செயலாளர் பிரேம்சேகர், பாசறை நிர்வாகி எம்.பி.பரத்ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.



செங்கல்பட்டு மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

மேலும் செய்திகள்