திருநின்றவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

திருநின்றவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2021-12-18 06:59 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை அண்ணாநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மா (வயது 46). திருநின்றவூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டதால் தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் பத்மாவின் வீட்டுக்குள் மழைநீர் புகுந்து விட்டது.

இதனால் வீட்டை பூட்டிவிட்டு மகனுடன் திருநின்றவூர் நத்தமேட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பத்மா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த மோதிரம், சங்கிலி, வளையல் உள்பட 7 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பத்மா திருநின்றவூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்