மெட்ரோ ரெயில் நிலையங்களில் இசை, கலை நிகழ்ச்சி - இன்றும், நாளையும் நடக்கிறது
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் இசை, கலை நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடக்கிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மக்கள் அறிந்து கொள்வதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) நடத்துகிறது.
‘ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை', நிமிர்வு கலையகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை ரெயில் பயணிகள், பொதுமக்கள் கண்டு மகிழலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.