காவேரிப்பட்டணம் அருகே மோட்டார்சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு
காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சந்தியா (வயது 25). சம்பவத்தன்று கணவன்-மனைவி 2 பேரும் மோட்டார்சைக்கிளில் காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் போத்தாபுரம் ஏரிக்கரை அருகில் சென்ற போது 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சந்தியா கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.