நாமக்கல்:
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 54,179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே 9 பேர் பெயர்கள் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,188 ஆக ஆனது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,212 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 38 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை கொரோனாவுக்கு 516 பேர் பலியாகி உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 53,250 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 446 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.