கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

செங்கோட்டை, புளியரை பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-12-17 21:54 GMT
நெல்லை:
நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர், சரவணபோஸ் மற்றும் போலீசார் செங்கோட்டை, புளியரை பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 2 மினிலாரிகளில் மொத்தம் 2½ டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மினிலாரிகளையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடையநல்லூரைச் சேர்ந்த சாமி (வயது 37), கேசவபுரம்புதூரைச் சேர்ந்த திருமலைக்குமார் (36), விளவங்கோட்டைச் சேர்ந்த ஆல்பர்ட் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


மேலும் செய்திகள்