வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பழைய ஆஸ்பத்திரி சாலையில் வசித்து வருபவர் ராஜா. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 28). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ஒருவர் முகவரி கேட்பது போல் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் திடீரென மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக மகாலட்சுமி அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.