டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-12-17 21:54 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு நேற்று இரவு பெரம்பலூரில் இருந்து உடும்பியம் நோக்கி ஒரு டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு சென்றனர். கிருஷ்ணாபுரம் அரிசி கிடங்கு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே டிராக்டர் கவிழ்ந்தது. டிராக்டர் டிப்பரில் இருந்து கரும்புகள் சாலையின் குறுக்கே விழுந்ததால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் கொண்டு சாலையின் குறுக்கே கிடந்த கரும்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்