ஆற்காடு அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது

108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது

Update: 2021-12-17 18:09 GMT
ஆற்காடு

ஆற்காட்டை அடுத்த தென்நந்தியாலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி (வயது 25). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று அதிகாலை அவருக்கு பிரசவ வலிஏற்பட்டது. வலி அதிகமானதால் 108 ஆம்புலன்சில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மருத்துவ உதவியாளர் சந்திரசேகரன், டிரைவர் சரவணன் ஆகியோர் அவரை அழைத்து சென்றனர். இடையன்சாத்து கிராமம் அருகே சென்றபோது காயத்ரிக்கு வலி அதிகமானதால்  ஆம்புலன்சை நிறுத்தி உதவியாளர் சந்திரசேகரன் பிரசவம் பார்த்தார். அதிகாலை 4.10 மணியளவில் காயத்ரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்