ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடை தீவனப் பயிர்கள் வளர்க்க பண்ணைக்குட்டை அமைப்பு
கால்நடை தீவனப் பயிர்கள் வளர்க்க பண்ணைக்குட்டை அமைப்பு;
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் லாடவரம் ஊராட்சியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் கால்நடை தீவன பயிர்கள் மற்றும் மரம் வளர்க்க 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கொண்டு பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரை மற்றும் பலர் உடன் இருந்தனர்.