பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது.

Update: 2021-12-17 17:21 GMT
சிவகங்கை, 
மானாமதுரையை அடுத்த மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது55). நேற்று காலை இவர் சிவகங்கை மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு சென்றார். அங்குள்ள விலக்கு சாலையில் நடந்து சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பு சட்டை அணிந்த 2 வாலிபர்கள், பாண்டியம்மாள் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டார்கள். இதுதொடர்பாக சிவகங்கை நகர் குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்